என்னை விட்டுப் போன கண்ணன் வரக்காணேனே!
பொழுது மிகவாச்சுதே சகியே என்னை விட்டுப்போன
கண்ணன் வரக் காணேனே (பொழுது)
குழலோசை கேட்டு கூடிடும் மங்கையர்
விழியால் வலை வீசி அழைத்துச் சென்றனரோ (பொழுது)
புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலே
பூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ?
பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்ற
பேச்சும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ? (பொழுது)
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: ரேவதி
5 comments:
படித்தபோது புரியவில்லை- நீ
படித்து சொன்னபோது -
புரிந்தது - என் நண்பா !!!
தழிழுக்கு -
ஆசான் வைத்து - படிக்கும் நிலை - இன்று!!
இதுபோன்ற செய்யுள்களுக்கு - இனி உயிர் வரும் நாள் மிக அருகில்.
வாழ்த்துக்கள் பல !!!
கவிதை நல்லா இருக்கு ... யார் அந்த பைங்கிளி ;)
ராதையாக இருக்குமோ ராமையா :-)
யார் அந்த ராதா ??? நிவாஸ் நீங்க சொல்லவே இல்லையே
oK BOY Nee Sonna athu sariya thaan iruku. Yarantha RATHAI
Post a Comment